Nadigar Sangam Election 2019 : Shocking Information | Nadikar Sangam | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாகவும் தன்னுடைய ஓட்டை கள்ள ஓட்டாக பதிவு செய்திருப்பதாகவும் பிரபல நடிகரான மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Nadigar Sangam Election 2019 : தமிழ் சினிமாவிற்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23-ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்திருந்தது.

இந்த தேர்தலில் வாக்களிக்க 3,171 பேர் தகுதி பெற்றிருந்தனர், ஆனால் ஆண்கள் 1,164 பேரும் பெண்கள் 440 பேரும் என மொத்தம் 1,604 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

மேலும் இறுதி நேரத்தில் தேர்தல் நேரத்தையும் இடத்தையும் அறிவித்ததால் பலரால் வாக்களிக்க முடியவில்லை. ஒரு சார்பாக இந்த தேர்தல் நடைபெற்றது என பாக்யராஜும் ஐசரி கணேஷ் அவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.

அதே போல் நடிகர் மோகன் வாக்களிக்க சென்ற போது அவருடைய ஓட்டை கள்ள ஓட்டாக பதிவு செய்திருந்தனர், இதனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார். கடந்த தேர்தலிலும் இவருடைய ஒட்டு கள்ள ஓட்டாக பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர், விஷால் ஆகியோர் தேர்தலை ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் சிறப்பாக நடத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி, சிம்பு, சமந்தா என பலர் ஒட்டு போட கூட வரவில்லை. தங்களுக்கு ஒட்டு போட்டவர்களுக்கு உட்லண்ட் ஹோட்டலில் வைத்து பாண்டவர் அணியினர் ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்காக பாண்டவர் அணி தரப்பில் 20 ரூம்கள் புக் செய்யயப்பட்டு இருப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. தபால் ஓட்டுகளிலும் தில்லுமுல்லு வேலைகள் அரங்கேறி இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

பல கட்டுப்பாடுகளுடன் தொடங்கிய வாக்கு பதிவு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்படியே தலைக்கீழாக மாறி விட்டதாக கூறுகின்றனர்.

சாதாரண நடிகர் சங்க தேர்தலுக்கு எதற்கு இப்படியொரு அக்கப்போர்? அப்படி இந்த தேர்தலில் என்ன தான் லாபம் பார்க்க போகிறார்கள் என தெரியாமல் நடுத்தர நடிகர், நடிகைகள் குழம்பி போயுள்ளனர்.

மேலும் இந்த தேர்தலின் ஒட்டு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால் ஒட்டு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு இந்த ஓட்டுகள் எண்ணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.