Nadhigalile Neeradum Suriyan Title Look

வித்தியாசமான டைட்டிலுடன் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணைந்துள்ள திரைப்படம் உருவாக உள்ளது.

Nadhigalile Neeradum Suriyan Title Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் இந்த கூட்டணி அமைந்தது. இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சிம்பு நடிக்க கௌதம் மேனன் இயக்க உள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

நேற்று கௌதம் மேனன் பிறந்த நாள் என்பதால் படக்குழு இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நதிகளிலே நீராடும் சூரியன் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.