ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் இணைந்து நடித்து இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் நான் சிரித்தால். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Naan Sirithaal Movie Review :
படத்தின் கதைக்களம் :
இடம் பொருள், சூழ்நிலை தெரியாமல் சிரித்து விடும் ஒரு வித சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் இப்படத்தின் கதை. இன்னும் சுருக்கமாக சொல்ல போனால் இப்படத்தின் இயக்குனர் ராணா இயக்கிய கெக்க பெக்க குறும்படத்தின் தழுவலே இப்படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
நடிப்பு :
ஹிப் ஹாப் ஆதி வழக்கம் போல தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அவர்களின் வேலையை சரியாக செய்துள்ளனர்.
தொழில் நுட்பம் :
இசை :
ஹிப் ஹாப் ஆதியே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிக்கும் படியாக உள்ளன. பின்னணி இசை சூப்பர்.
ஒளிப்பதிவு :
வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியுள்ளது.
எடிட்டிங் :
ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் கச்சிதம்.
இயக்கம் :
ரஜினி கொடுத்த ஐடியாவால் இயக்குனர் ராணா கெக்க பெக்க என்ற குறும்படத்தை தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார். பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் மொக்கையா காமெடி பண்ணாதீங்க என்ற பீலையும் கொடுக்கிறார்.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதைக்களம்
2. ஆதியின் நடிப்பு
3. காமெடி
தம்ப்ஸ் டவுன் :
1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. சில இடங்களில் சிரிப்பே வராத காமெடிகள் நம்மை சோதிக்கின்றன.