நான் அவளை சந்தித்த போது என்ற திரைப்படம் காதலை காமெடியாக பேசும் படமாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த வாரம் பல கிறித்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட ரிலீஸாக பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. அதில் முக்கியமான ஒன்று நான் அவளை சந்தித்த போது.
டைட்டிலே வித்தியாசமாக பலரையும் கவரும் விதமாக அமைந்துள்ள இந்த படத்தை எல்.ஜி ரவிச்சந்திரன் இயக்க சந்தோஷ், சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இன்னும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 27-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை அடுத்து நாட்டாமை தீர்ப்பு சொல்லும் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி பலருக்கும் சிரிப்பை உண்டாக்கியுள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.
#NaanAvalaiSanthithaPothu Releasing this Friday!
Watch Sneak Peek ➡https://t.co/OyhukKTSlY@Actorsanthosh @IamChandini_12 @trendmusicsouth pic.twitter.com/XpAO4xVbbZ
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 24, 2019