மணிரத்தினம், சங்கர் என தமிழ் சினிமாவின் ஹாப்பி இயக்குனர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் மிஷ்கின்.
Mysskin Birthday Celebration Photos : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இன்றைய கால இளைஞர்களின் ட்ரெண்ட் செட்டர் என்று கூட கூறலாம்.
இவர் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் மிஷ்கினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
மேலும் தன்னுடைய பிறந்த நாள் விருந்தாக பிசாசு படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க உள்ளதாகவும் கார்த்திக் ராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கோவா பீச் ஓட்டலில் காதலனின் பிறந்தநாளை படு ரொமான்டிக்காக கொண்டாடிய நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்!
இந்த நிலையில் தற்போது மிஷ்கின் அவர்கள் மணிரத்னம், ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், ஒய் ஜி மகேந்திரன், லிங்குசாமி மற்றும் பலருடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.