Music Composer of Thalapathy 65

தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Music Composer of Thalapathy 65 : தமிழ் சினிமாவின முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய், முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இப்படத்திலிருந்து ஏ ஆர் முருகதாஸ் விலகிக் கொண்டதால் யார் இந்த படத்தை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

சமீபத்தில் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமார் இயக்க இருப்பதாக தகவல் கசிந்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு அனிருத் இசையில் இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக விஜய் அனிருத் கூட்டணி கத்தி திரைப்படத்தின் மூலமாக இணைந்து பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் இந்த கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளது.

தற்போது மீண்டும் அடுத்த படத்திலும் இதே கூட்டணி தொடர்வது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.