Murugadoss Next Movie

அடுத்த படத்திற்கு ஹீரோ இல்லாமல் ஏ ஆர் முருகதாஸ் அல்லல் பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Murugadoss Next Movie : தமிழ் சினிமாவில் தல அஜித்தை வைத்து தீனா என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கியவர் முருகதாஸ்.

இந்த படத்திற்கு பிறகு கேப்டன் விஜயகாந்த், சூர்யா, தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல்வேறு நடிகர்களை வைத்து படத்தை இயக்கியுள்ளார்.

ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளியான தர்பார், சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை எனலாம்.

இருப்பினும் அடுத்ததாக தளபதி விஜயின் 65-வது படத்தை இயக்க இருந்தார். ஆனால் இந்த படத்தில் இருந்து முருகதாஸ் வெளியேற்றப்பட்டார்.

இந்த படத்தில் இருந்து முருகதாஸ் வெளியேற்றப்பட்ட அதைத் தொடர்ந்து அவர் அடுத்த படத்திற்கான ஹீரோ யாரும் கிடைக்காமல் அல்லல்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

ஒரு மாஸான இயக்குனராக வலம் வந்த முருகதாஸூக்கா இப்படி ஒரு நிலைமை என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

மேலும் முருகதாஸ்க்கு தல அஜித் அல்லது சூர்யா போன்ற நடிகர்கள் வாய்ப்பு கொடுக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.