Murugadoss Decision on Upcoming Movies

இனி விஜயுடன் படமே பண்ணப் போவதில்லை என முருகதாஸ் சபதம் என்ற எடுத்திருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Murugadoss Decision on Upcoming Movies : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான தீனா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ்.

இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர் தளபதி விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்க்கார் என மூன்று படங்களை இயக்கினார். நான்காவதாக தளபதி 65 படத்திற்காக இவர்கள் எந்த கூட்டணி அமைய இருந்தது. முதலில் பாதி கதையை கேட்டுவிட்டு ஓகே சொன்ன விஜய் முழு கதையை கேட்ட பிறகு வேண்டாம் என நிராகரித்து விட்டார்.

கதையில் பல மாற்றங்களை செய்து மீண்டும் மீண்டும் முருகதாஸ் விஜய்யை அணுகி கதையைக் கூறியும் தளபதிக்கு திருப்திகரமாக அமையவில்லை. இதனால் அடுத்தடுத்த படங்களை இளம் இயக்குனர்களுக்கு தான் கொடுக்கப் போகிறேன் என விஜய் ஓப்பனாக தெரிவித்து விட முருகதாஸ் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னுடைய நட்பு வட்டாரத்தில் இனி தளபதி விஜய்யை வைத்து படத்தை இயக்கப் போவது இல்லை எனவும் தன்னுடைய படங்களுக்கு ஹீரோ முக்கியமில்லை தன்னுடைய கதைதான் வெற்றிக்கு காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து வரும் படங்களை இயக்குவேன் என கூறி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.