Mugen Rao in Velan Movie

முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Mugen Rao in Velan Movie : Skyman films international கலைமகன் அவர்களின் முதல் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் இணை இயக்குனராக பணியாற்றிய கவின் அவர்களின் இயக்கத்தில் முகின், பிரபு, மீனாட்சி, சூரி, தம்பி ராமைய்யா போன்ற பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் ‘வேலன்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

இசையமைப்பாளராக கோபி சுந்தர் & DOB கோபி ஜகதீஸ்வரன் ஆகியோர் இணைந்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் பொள்ளாச்சியில் நடைப்பெற்று வருகிறது.

இதையடுத்து சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்தின் first look இம்மாத இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.