Mugen Rao in Kalaiman Production

சிறுத்தை சிவாவின் இணை இயக்குனர் கவின் இயக்கத்தில் பிக் பாஸ் முகேன் நடிக்க உள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mugen Rao in Kalaiman Production : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் . இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி டைட்டிலையும் வென்றவர் முகேன்.

தற்போது இவர் ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தை சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய கவின் இயக்கவுள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக உள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு விருந்தாக நேற்று வெளியானது.

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் இந்த அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Skyman Films International நிறுவனமும் அடுத்தடுத்த படங்களுக்காக பல இயக்குனர்கள் மற்றும் பிரபல நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அது குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.