குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய நிகழ்ச்சி ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
Mr Mrs Chinnathirai Season 3 : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சேனல் விஜய் டிவி. ரியாலிட்டி ஷோக்களுக்கு இந்த டிவி சேனலை அடித்துக் கொள்ள வேறு எந்த சேனலும் இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்த சேனலில் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இரண்டாவது சீசனை தொடர்ந்து அடுத்ததாக புதிய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியினை பிக்பாஸ் அர்ச்சனா தொகுத்து வழங்கவுள்ளார்.
12 ரியல் ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.