Movie Team Plan on Karnan Trailer Release

கர்ணன் படத்தின் டிரைலர் வெளியாகி அது ஏன் என்று தெரிய வந்துள்ளது.

Movie Team Plan on Karnan Trailer Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர், டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சந்தோஷ் நாராயணின் இசையில் வெளியான சில பாடல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. திரௌபதியின் முத்தம் என்ற பெயரில் பாடல் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் எழுந்தன.

அதேபோல் இன்னொரு பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்துவது ஆக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடரப்பட்டு பின்னர் அப்பாடலின் தலைப்பை படக்குழு மாற்றியது.

அதேபோல் இந்த படத்தின் டீசர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் பட ரிலீஸ் ஆகும் நேரத்தில் தேவையில்லாத சர்ச்சை வேண்டாம் என படக்குழு ட்ரெய்லரை வெளியிடாமல் நேரடியாக படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.