monkey
காவல் நிலையத்தில் ஒரு காவல் அதிகாரியின் தலையின் ஒரு குரங்கு பேன் பார்க்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Monkey sit on police inspector shoulder viral video – நாய்க்கு அடுத்து மனிதர்களுடன் நெருக்கமாக பழங்கும் விலங்குகளில் ஒன்று குரங்கு ஆகும். உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட் எனும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீகாந்த் திவேதி. இவர் சமீபத்தில் அலுவலகத்தில் அமர்ந்து தனது பணிகளை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குரங்கு அவரின் கழுத்துப்பகுதியில் அமர்ந்து அவரது தலையில் பேன் பார்க்க துவங்கியது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அந்த குரங்கை விரட்டாமல் ஆய்வாளர் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் குரங்குகள் அதிகம். அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இருக்கையில் குரங்குடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.