Mohan G Idea to Close Tasmac Permanently
Mohan G Idea to Close Tasmac Permanently

டாஸ்மாக்கை முழுசா மூட பெண்களுக்கு திரௌபதி பட இயக்குனர் ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

Mohan G Idea to Close Tasmac Permanently : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வெற்றி பெற்றது.

இப்படத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மோகன்ஜி பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்.

கிளப்பி விட்ட நெட்டிசன்கள்.. விஜய்யிடம் நலம் விசாரித்தாரா அஜித்? – வெளியான உண்மை.!

இந்த நிலையில் இவர் ஊரடங்கு சமயத்தில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை ஒரேயடியாக மூடுவதற்கு ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பெண்கள் ஒட்டுமொத்தமாக #NoMoreTASMAC என பதிவிடுங்கள்.. உங்கள் கோரிக்கை அரசாங்கத்திற்கு கேட்கும் வரை.. Social network மூலமாக இதை உங்களால் நடத்தி காட்ட முடியும் என கூறியுள்ளார்.

பெரிய அளவில் வருமானம் கொடுக்கும் டாஸ்மாக்கை அரசங்கம் மூடுமா என்ன?