Modi meets EPS
Modi meets EPS

Modi meets EPS : கஜா புயல் பாதிப்பு தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றை பிரதமரிடம் அளித்தார்.

அந்த அறிக்கையில், கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த டெல்டா மாவட்டங்களில் அனைத்தையும் சீரமைக்க, 13, 000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரதமரை சந்திக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

அதை தொடர்ந்து, கஜா புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன, அதிலிருந்து மக்களை மீட்கும் பணி, டெல்டா பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், டெல்டா மாவட்டங்களை சீரமைக்க ஆகும் செலவு ஆகியவற்றிற்கான செலவுகள் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1,500 கோடியை உடனடியாக தருமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் புயல் பாதித்த பகுதிகளில் பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கவும், புயல் பாதிப்பை சரிசெய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்குமாறும் கேட்டு கொண்டார்.