MNM Party Current Status

2021 சட்டமன்றத் தேர்தலில் உலக நாயகன் கமல்ஹாசன் யாருடன் கூட்டணி அமைப்பார்? அந்தக் குறித்த யூகங்கள் வெளியாகியுள்ளன.

MNM Party Current Status : தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக போட்டியிட உள்ளார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து நின்று போட்டியிடுவதைக் காட்டிலும் திமுகவுடன் அல்லது ரஜினியுடன் இணைந்து போட்டியிடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இதற்காக திமுகவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கமல்ஹாசன் தங்கள் கட்சிக்கு 45 இடங்கள் கேட்டிருந்த நிலையில் திமுக 25 இடங்களை ஒதுக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

ஒருவேளை திமுக கமல் கட்சிக்கு 25 சீட்டுகளுக்கு மேல் கொடுத்தால் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அப்படி இல்லை என்றால் கமல் ரஜினியுடன் இணைந்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவுடன் கமல் இணைந்தால் ஈசியாக 5 சதவீத ஓட்டுக்களை பெற்று விடுவார் எனவும் கூறப்படுகிறது.

கமல், ரஜினி இணையும் கூட்டணியில் ஓவைசியும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடந்தால் 10 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

இதில் எது நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.