தேவர் ஜெயந்தி சர்ச்சை.. எம்.எல்.ஏ கருணாஸ் எச்சரிக்கை அறிக்கை! | MK.Stalin | Karunas

MLA Karunas Warning to Stalin : முத்துராமலிங்க தேவர் கோவில் பிரசாதத்தை கீழே கொட்டிய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கருணாஸ் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேவர் ஜெயந்தி திருநாள் கொண்டாடப்பட்டது. முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் என்பதால் அரசியல் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்தி அவருக்கு விபூதி வழங்கப்பட்டது.

தேவர் கோவிலில் வழங்கப்பட்ட விபூதியை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கீழே கொட்டியதாகவும் இது தேவர் குல மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் எம் எல் ஏயும் முக்குலத்தோர் படை கட்சியின் தலைவருமான கருணாஸ் அவர்கள் ஸ்டாலின் அவர்கள் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.