MK Stalin Admitted in Hospital

YouTube video

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று காலை தனது தொகுதியான கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.கவினர் ஸ்டாலினை மருத்துமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே உடல்நலக் குறைவால் அவதிபட்டு வரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மயக்கம் ஏற்பட்ட செய்தி தி.மு.கவினரிடையே கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஏற்கனவே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கொரோனாவை காராணம் காட்டி வீட்டில் இருந்து கொண்டு கட்சி நிர்வாகிகளை கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். கொரோனா தொற்று காரணமாக தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவானதை அடுத்து, காணொலி வாயிலாக மட்டுமே கட்சி கூட்டங்களில் பேசி வருகிறார் மு.க. ஸ்டாலின்.

கட்சி பொதுக் கூட்டங்களில் காணொலி வாயிலாக ஸ்டாலின் உரையாற்றி வருவது, தி.மு.கவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்து வருகிறது. இதனால், வீட்டைவிட்டு வெளியே வந்து தனது தொகுத்திக்காவது செல்ல வேண்டும் என்று கட்சியினரின் சொன்னதாக தெரிகிறது. இதனால், கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்சியில் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போதுதான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது, இதனால் பயந்து போன தி.மு.கவினர், கொளத்தூரில் உள்ள மருத்துமனைக்கு அவரை கூட்டி சென்றனர். பின்னர், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மேல் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

தேர்தல் சமயம் நெருங்கிவரும் நிலையில் ஸ்டாலினின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது தி.மு.கவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்டாலின் உடல்நிலை இப்படி இருக்கையில், ஊரடங்கு தொடங்கியது முதல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முப்பது மாவட்டங்களுக்கு சென்று கொரொனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார்.

மேலும், வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து வருகிறார்.

ஆனால் ஒரு நாள் நிகழ்ச்சிக்கே ஸ்டாலின் இப்படி மயக்கம் போட்டுட்டாரே பாவம்பா அந்த மனுஷன் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.