Miss India Movie Trailer

மிஸ் இந்தியா படத்தின் ட்ரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது

Miss India Movie Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மிஸ் இந்தியா என்ற நாயகியை மையமாக கொண்ட கதாபாத்திரத்தை கொண்ட படத்தில் நடித்துள்ளார்.

நரேந்திர நாத் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், நதியா, நவீன் சந்திரா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று காலை 11 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது மிஸ் இந்தியா படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ட்ரைலர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.