Minister Sengottaiyan Speech : Political News | Latest News | is likely to be postponed due to the high fahrenheit. | Minister Sengottaiyan

Minister Sengottaiyan Speech :

சென்னை: ஜூன் 3-ம் தேதி திட்டமிட்டபடி வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதேபோல கடந்த ஆண்டும் ஜூன் 1ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு, கோடை விடுமுறை முடிந்து வரும் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அரைகுறை உடையில் எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்!

ஆனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் அதிகபட்ச ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்துவதால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல் பரவியது.

இந்நிலையில் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன கூறுகையில், ‘திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும்., பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளிவைக்கும் எண்ணம் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகும் என்ற செய்தி தவறானது என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி மாணவர்கள் எவ்வாறு வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியும் (!?) என்று அச்சத்தில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.