Minister Jayakumar Speech : Palanisamy's social record of being politically motivated. Political News, Tamil nadu, Politics, BJP, Latest Political News

Minister Jayakumar Speech :

சென்னை: இந்தி எந்த வடிவில் வந்தாலும் அதை தமிழ்நாடு ஏற்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கூறியுள்ளார்.

அதோடு தமிழகத்தில் எப்போதும் இரு மொழிக்கொள்கை தான் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு விவகாரம் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், இந்தி எதிர்ப்பு மற்றும் இரு மொழிக்கொள்கை இதுவே தமிழக அரசின் கொள்கை என தெரிவித்துள்ளார்.

மேலும் இருமொழிக் கொள்கையில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம் என்றும் மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் பழனிசாமி நீக்கினார் என்று மைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சமூகவலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

NGK சக்ஸஸ்க்கு இது தான் சேம்பல், செல்வராகவனையே வியக்க வைத்த பாட்டி – வைரலாகும் வீடியோ.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிற மாநிலங்களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் டிவிட்டரில் அவ்வாறு பதிவு செய்தார் என்று கூறினர்.

மேலும் தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா என்ன? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து அனைவரிடத்திலும் இருக்க வேண்டும் என்றும்,

நீட் விவகாரத்தில் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது என்றும், எப்போதும் தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது.. என்றும் கூறினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.