டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் துவக்கப்படும்! - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு | EPS

Mini Clinic in Tamilnadu : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்த போது தமிழகம் எந்த அளவிற்கு வளர்ச்சி பாதையை நோக்கி சென்றதோ அதே அளவிற்கு தற்போதும் தொடர்ந்து பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது.

அம்மாவின் ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகச் சரியாக வழி நடத்தி வருகிறார். தொடர்ந்து தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

Mini Clinic in Tamilnadu

எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மக்கள் பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.