சென்னை மெட்ரோ கட்டணம் அதிரடி குறைப்பு - முதல்வர் பழனிசாமி யின் உத்தரவு.!! | Edappadi Palaniswami
Metro Rates Reduces : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.


அதிகபட்ச கட்டணம் ரூபாய் 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2 கிமீ வரை பயணிக்க ரூ 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல் 2 முதல் 4 கிமீ வரை பயணிக்க ரூ 20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.