அசுரன் படத்திற்கு விருது கிடைத்ததை வைத்து மீம்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mems About Eeshwaran Vs Asuran : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அசுரன். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூலில் மாபெரும் வேட்டையாடியது.

மேலும் இந்தத் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசுரன் படக்குழு உச்சகட்ட உற்சாகத்தில் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது மீம்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதாவது சிம்பு அழிக்க வந்த அசுரனுக்கே இவ்வளவு விருது என்றால் காக்க வந்த ஈஸ்வரனுக்கு எவ்வளவோ? என சிந்திப்பது போல அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.