Melody Songs Update from Valimai

ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ரிலீஸ் தள்ளிப் போனதால் அப்செட்டில் இருக்கும் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கும் வகையில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Melody Songs Update from Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் கிப்ட் ஆக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனவைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் ரிலீசை தள்ளி வைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியானது.

இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இவன் சங்கர் ராஜா படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மொத்தம் மூன்று மெலடி பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவை விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் போல பெரும் ஹிட்டடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.