Mehandi Circus Review

Mehandi Circus Review : இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் ராஜு முருகனின் கதை மற்றும் வசனத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி, RJ விக்னேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

கேசட் கடை வைத்திருக்கும் இளைஞனான மாதம்பட்டி ரங்கராஜ், வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள சர்க்கஸ் கூடாரத்தில் வேலை பார்த்து வரும் ஸ்வேதா திருப்பதியை காதலிக்கிறார். ஆனால் நாடோடி பெண்ணை காதலிப்பதா என குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த சர்க்கஸ் கூடாரத்தையும் காலி செய்து கொண்ட சொந்த ஊருக்கு திரும்பி செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். சர்க்கர்ஸ் கும்பலும் காலி செய்து கொண்டு சென்று விடுகின்றனர்.

ஆனாலும் தன்னுடைய காதலியை மறக்க முடியாத ரங்கராஜ் நாயகியை தேடி வடநாட்டிற்கு செல்கிறார். அங்கு தன்னுடைய காதலியை கண்டு பிடித்தாரா? அவருடன் சேர்ந்தாரா இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

மாதம்பட்டி ரங்கராஜிற்கு இது முதல் படம் என்றாலும் அவருடைய நடிப்பு அப்படி தெரியவில்லை. உணர்வுபூர்வமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் நடித்துள்ளார்.

நாயகியான ஸ்வேதா திருப்பதி இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று கூறுவது தான் கச்சிதமாக இருக்கும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற நடிகர் நடிகைகளும் தங்களின் கதாபத்திரங்களை அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

தொழில்நுட்பம் :

இசை :

சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு காதல் படத்திற்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ அப்படி இசையமைத்து படத்திற்கு மிக பெரிய பலம் சேர்த்துள்ளார். பின்னணி இசையும் பாடல்களும் அருமையாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

செல்வகுமார் என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதையும் திறம்பட செய்து கொடுத்து காட்சிகளுக்கு மெருகேற்றியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதியின் நடிப்பு
2. சான் ரோல்டனின் துள்ளலான இசை
3. படத்தின் ஆரம்ப காட்சி
4. சர்க்கஸை மையமாக கொண்டு உருவான கதை
5. 90’s நினைவுகளை மீண்டும் கண் முன் கொண்டு வந்தது.
6. கதைகளம்.

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதியை விட இரண்டாம் பாதியின் வேகம் குறைந்தது.