Mega Cricket in Kanyakumari
Mega Cricket in Kanyakumari

Mega Cricket in Kanyakumari : குமரி மாவட்டம் பொட்டல்குளத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ரீதியான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பொட்டல்குளம், புன்னார்குளம், மைலாடி, சுந்தரபுரம், உள்ளிட்ட ஊர்களில் இருந்து 15 அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் முதல் பரிசை பொட்டல்குளம் மாஸ்டர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளும், கோப்பையும் வழங்கி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலப்பை PT செல்வகுமார் பேசியதாவது :

குமரி மாவட்ட இளைஞர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அந்த காலத்தில் 100 இளைஞர்கள் வாருங்கள் இந்தியாவையே மாற்றுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். ஆனால் இன்று நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை ஊழலை ஒரு பேஷனாக கொண்டு வந்துவிட்டார்கள்.

ஊழல்கள் ஒழிக்கப்படவேண்டும். ஒரு கிரிக்கெட் போட்டிக்காக இளைஞர்கள் இந்த மலைப்பகுதியில் உடலை உற்சாகமாக வைப்பதற்காக அவர்கள் வருவது நல்ல விஷயம். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் இந்த போட்டியை நடத்தினோம்.

இளைஞர்களால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர முடியும். நம் மண்ணில் இருந்து இந்திய அணியில் விளையாடும் வகையில் நீங்கள் உருவாக வேண்டும். கொரோனா என்னும் கொடிய நோயால் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கொரோனா நோயை யாரும் வேண்டும் என்று கொண்டு வரவில்லை.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை!

ஆகவே யாருக்காவது கொரோனா வந்தால் அவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காதீர்கள். இன்று விவசாயம் கல்வி பொருளாதாரம், சிறு தொழில் போன்றவை கேள்விக்குறியாக உள்ளது. எப்படி நாம் இந்த பொருளாதார பிரச்னையில் இருந்து மீண்டு வர போகிறோம் என்பதே மிக பெரிய சவாலாக உள்ளது. கஷ்டத்திலும் வறுமையிலும் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நாம் கை கொடுத்து உதவ வேண்டும்.

வலியோர்கள் எளியோரை தாக்குவது பெரிய விசயமே இல்லை. அரசும் அதிகாரிகளும் சாதாரண கூலித்தொழிலாளிகளை வலுக்கட்டாயமாக பிடித்து வாகனங்களை பறித்து லட்சக்கணக்கான வழக்குபோடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. ஐயா எடப்பாடி அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அவருக்கு எளிய மக்கள் கஷ்டம் புரியும். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாகனங்களையும் திருப்பி கொடுக்க ஆவணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இளைஞர்களும் இது தன்னுடைய குடும்ப பிரச்சனை போல் எண்ணி பொதுத்தளத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்களை காப்பாற்ற தான் சட்டமே தாவிர சட்டத்தை காப்பாற்ற மக்கள் இல்லை. உண்ண உணவின்றி, செலவுக்கு பணமின்றி, வேலை தொழில் செய்ய வழியின்றி அணு அணுவாக சாமானியர்கள் சித்திரவதை அனுபவிக்கிறார்கள். இவர்கள் ஒன்றும் குற்றவாளிகளோ, ரவுடிகளோ, திருடர்களோ இல்லை. எளியவர்களையும் வலிமையற்றவர்களையும் அடக்குவதும் அதிகாரம் செய்வதும் பெரிய வீரம் இல்லை என்று பேசினார்

இந்நிகழ்வில் கலப்பை சட்ட ஆலோசாகர் பாலகிருஷ்ணன், கலப்பை மகளிர் அணி தலைவி பேராசிரியர் ரெங்கநாயகி, முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் ஏசு தாஸ், வளர்நகர் ஊர் தலைவர் மைக்கேல் சாம் மனோகர், பொட்டல்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் பொருளாளர் ஆறுமுகம். மூலிகை தியான மண்டபம் சித்தர் தியாகராஜ சுவாமி, குமரி மாவட்ட கலப்பை தலைவர் சிவபன்னீர், கலப்பை நிர்வாகி ரூபன், ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1
2
3
4