Mega Announcement From Sun Pictures

மெகா அறிவிப்பு ஒன்று வெளியாகப் போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mega Announcement From Sun Pictures : தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 திரைப்படம் சூர்யாவின் சூர்யா கார்த்தி உள்ளிட்ட படங்களையும் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாகவும் அது என்ன என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள் எனவும் பதிவு ஒன்றை அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் இதே தளபதி 65 படம் பற்றிய அறிவிப்பை இருக்கும் ரஜினியின் அண்ணாத்த படம் பற்றிய அப்டேட் ஆக இருக்கும் என கூறிவருகின்றனர்.

இது குறித்து விசாரிக்கையில் நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

இதனால் நாளை மாலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தளபதி 65 படத்தின் அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.