விஜயை விளாசிய மீரா மிதுன்

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் மக்களை ஏமாற்ற போறீங்க என விஜய்யை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

விஜயை விளாசிய மீரா மிதுன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை அவரது அப்பா அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியாக பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவவே விஜய் உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தார். மேலும் என்னுடைய புகைப்படத்தை ஐயோ பெயரையும் பயன்படுத்தினார் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பாவை எச்சரித்தார்.

இப்படியான நிலையில் நடிகை மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கம்போல விஜய் விமர்சனம் செய்துள்ளார். அப்பாவும் மகனும் இணைந்து ட்ராமா போடுவதாக உள்ளார்.

அரசியலுக்கு வரணும்னா தைரியம் இருக்கணும் தைரியம் இல்லனா அரசியலுக்கு வரக்கூடாது. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி டிராமா போட்டு மக்களை ஏமாற்றுவீங்க என கேள்வி கேட்டு விஜயை விளாசியுள்ளார்.