Meera Mitun Vs Nayanthara

நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப் படத்தில் அம்மன் வேடத்தில் நடித்திருப்பது பற்றி மீரா மிதுன் பதிவிட்டுள்ள பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Meera Mitun Blast Nayanthara : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அஜித் விஜய் சூர்யா தனுஷ் ரஜினி என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் இவர் நாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆர் ஜே பாலாஜி இயக்குனராக அறிமுகமாகி இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து ஆடி குத்து என்ற பாடல் வெளியாக இருப்பதாகவும் அதற்கு தயாரா எனக்கு ஆர் ஜே பாலாஜி பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த மீரா மிதுன் திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்தவர் எல்லாம் அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார். இந்த அசிங்கம் எல்லாம் கோலிவுட் சினிமாவில் தான் நடக்கும். இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் வாய் திறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகிறார்.

https://twitter.com/meera_mitun/status/1323329664799010816?s=20
https://twitter.com/Karthik50036/status/1323348510809313280?s=20
https://twitter.com/Thaladaw5/status/1323332246040846336?s=20
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.