Meera Mitun Blast Kollywood

படுக்கைக்கு போனால்தான் பட வாய்ப்பு என்ற நிலைமைதான் கோலிவுட் சினிமாவில் இருக்கிறது என பேசியுள்ளார் நடிகை மீரா மிதுன்.

Meera Mitun Blast Kollywood : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விஜய் சூர்யா ரஜினி கமல் த்ரிஷா நயன்தாரா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார்.

மேலும் தனக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தமிழ் சினிமாவையும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவின் படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு என்பது உண்மை. படக்குழுவினரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால் நான் அப்படி செய்வதில்லை, அப்படியான குடும்பத்திலிருந்து நான் வரவில்லை என பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.

மேலும் இந்த சமுதாயத்தில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனால் ஏற்படும் மன உளைச்சலை குறைக்கவே நான் மது அருந்துவேன், சரக்கு அடிப்பேன் என்று கூறியுள்ளார்.