Meera Mitun Apologies to Vijay and Surya

விஜய், சூரியாவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.

Meera Mitun Apologies to Vijay and Surya : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் எட்டு தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் கோலிவுட் மாஃபியா என விஜய், சூர்யாவை விமர்சனம் செய்து வந்தார். மேலும் தன்னுடைய வாய்ப்புகளை தடுத்தவர்களும் இவர்கள் தான் என தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதனால் விஜய், சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து மீரா மிதுனை திட்டித் தீர்த்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் சூர்யாவிடமும் அவர்களது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். இதுவரை என்னைச் சுற்றி நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் அப்சரா ரெட்டி என்ற திருநங்கை தான் காரணம். அவர்தான் எல்லா வேலையில் செய்துவிட்டு விஜய் மற்றும் சூர்யா செய்வதுபோல மாய பிம்பத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்போது எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக விஜய் சூர்யா ரசிகர்கள் அது எப்படி உன்னை விட்டு விடுவோம் என கமெண்ட் அடித்து அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.