Meera Mitun About ThalaThalapathy

அஜித் இல்லன்னா விஜய் ஒண்ணுமே இல்லை என சர்ச்சை நடிகை பதிவிட்டு இருப்பது அஜித் ரசிகர்களையும் ஆத்திரப்பட வைத்துள்ளது.

Meera Mitun About ThalaThalapathy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பது இது தரப்பு ரசிகர்களுக்கும் தெரிந்த ஒன்று. அஜித் விஜய் ரசிகர்கள் தங்களுக்குள் என்னதான் போட்டி இருந்தாலும் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் நிச்சயம் கூடி விடுவார்கள்.

அப்படித்தான் தற்போது அஜித்தை பெருமைப்படுத்திய விஜய் தரக்குறைவாகப் பேசியும் மீரா மிதுன் பதிவிட்டுள்ள பதிவு அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், விஜய் இணைந்து நடிக்க ஒரு ஐடியா இருக்கு, ஆனால் அதுக்கு?? – வெங்கட் பிரபு ஓபன் டாக்.!!

அதாவது தல தளபதி ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஸ்டேக் மூலம் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் மீரா மிதுன் அஜித் மட்டும் தான் Pride ஆஃப் இந்தியா என தெரிவித்துள்ளார். அஜித் இல்லன்னா விஜய் யாருன்னு கூட யாருக்கும் தெரியாது. விஜய் கோலிவுட் மாஃபியா என விமர்சனம் செய்துள்ளார்.

மீரா மிதுன் இந்தப்பதிவு அஜித் ரசிகர்களையும் ஆத்திரப்பட வைத்துள்ளது. உன்னுடைய சுய விளம்பரத்திற்காக அஜித் பெயரை பயன்படுத்தவேண்டாமென நாங்கள் பலமுறை கூறி உள்ளோம் என அவரை கண்டித்து வருகின்றனர்.

மேலும் அஜித், விஜய் என இருவருமே இந்திய சினிமாவின் பொக்கிஷம் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1298328512936308736?s=19

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/SheikAkthar77/status/1298331179888730112?s=19

https://twitter.com/Vinpu007/status/1298445338139713536?s=19

https://twitter.com/Parthib60742267/status/1298333470914015232?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.