Maayanadhi Movie Review

அசோக் தியாகராஜன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெண்பா, அபி சரவணன், ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயநதி.

படத்தின் கதைக்களம் :

சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவர் வெண்பா. தன்னுடைய மகளுக்காக வேறொரு கல்யாணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய மகளுக்காக மட்டுமே வாழ்த்து வருகிறார் ஆடுகளம் நரேன், பள்ளியில் படித்து வரும் தன்னுடைய மகளை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என்பது தான் இவருடைய ஆசை.

அதே போல் அபி சரவணன் ஆட்டோ டிரைவராக படிக்காதவராக நடித்துள்ளார். இவருக்கு வெண்பாவின் மீது காதலில் ஏற்படுகிறது. காதலுக்கும் அப்பாவின் பாசத்திற்கும் இடையே என்ன நடக்கிறது? இறுதியில் வெண்பா காதலனுடன் சேர்ந்தாரா? அல்லது அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

வெண்பா பள்ளி மாணவியாக அப்பாவின் பாசக்கார பெண்ணாக அழகான நடிப்பால் நம்மை கவர்கிறார்.

அபி சரவணன் ஒரு ஆட்டோ டிரைவராக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆடுகளம் நரேன் வெண்பாவின் அப்பாவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக உள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

பாவத்தரணியின் இசை அற்புதம், பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு :

ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதிவு தெளிவு

எடிட்டிங் :

கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

அசோக் தியாகராஜன் இன்றைய கால சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் தேவையான கதையை கையில் எடுத்து அதனை சிறப்பாக கொண்டு சென்றுள்ளார்.

மொத்தத்தில் மாயநதி அப்பாவை நேசிக்கும் பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.