Master Vs Viswasam

விசுவாசம் திரைப்படத்துடன் ஒப்பிடுகையில் மாஸ்டர் திரைப்படம் குறைந்த அளவிலான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Master Vs Viswasam TRP : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் முதல் பிரீமியர் காட்சி தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது.

மாஸ்டர் திரைப்படம் டி ஆர் பி விசுவாசம் படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முயற்சியில் தோல்வியை தான் தங்கியுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் 17.10 ரேட்டிங்கை பெற்றுள்ளது. விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை 18.1 ரேட்டிங்குடன் முதலிடத்தை உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதே ஏப்ரல் 14-ல் இதே நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 பைனல் நிகழ்ச்சி காரணமாக மாஸ்டர் திரைப்படத்தில் ரேட்டிங் குறைந்திருக்கும் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.