Master Vs Cook With Comali2

மாஸ்டர் படத்துக்கு செம டஃப் கொடுத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

Master Vs Cook With Comali2 : தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும் போது அதன் டிஆர்பி ரேட்டிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தல அஜித், தளபதி விஜய் போன்ற மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் டிஆர்பியில் எந்த அளவிற்கு ரேட்டிங் பெறுகிறது என ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

தற்போது வரை தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் தான் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனை தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

கடந்த தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டது. அதற்குப் போட்டியாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் ஒளிபரப்பானது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருப்பதால் மாஸ்டர் படத்திற்கு டிஆர்பியில் பெரிய அளவில் டப் கொடுத்துள்ளது.

இந்த இரண்டில் ஜெயித்தது எது என்பது இந்த வார முடிவில் தான் தெரிய வரும் என்பதால் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.