Master Vaathi Coming Song Record

விஜய் ரசிகர்களுக்கு இன்று பிரம்மாண்ட கொண்டாட்டம் காத்திருக்கிறது எனலாம்.

Master Vaathi Coming Song Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லனாக நடிக்க ஆண்ட்ரியா வில்லியாக நடித்துள்ளார். மாளவிகா மோகணன் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் தெலுங்கு டீஸர் அறிவிப்பு வெளியானதால் உற்சாகமான விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். நீங்கள் ரெடியா??

மாஸ்டர் தெலுங்கு டீசர் ரிலீஸ் ஒருபுறமிருக்க வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 95 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கான கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.

https://twitter.com/VijaysmKochi/status/1339428619127386112?s=19