Master Trailer Release Update

மாஸ்டர் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master Trailer Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி படத்தின் ட்ரைலர் பரபரப்பாக உருவாகி வருகிறதாம். கிறித்துமஸ் விருந்தாக ரிலீசாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் விஜய் ரசிகர்களுக்கு வெகு விரைவில் செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.