Master Trailer and Release Date Info
Master Trailer and Release Date Info

மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Master Trailer and Release Date Info : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

அவசர அவசரமாக அஜித் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் இதுதானா?? வெளியான தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேட்டன், ஸ்ரீமன், பிரேம், சஞ்சீவ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் சம்மர் ரிலீசாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

ஜூன் மாத இறுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு முடிந்ததும் இந்த நடிகரின் படம் தான் தமிழில் முதலில் ரிலீஸ் ஆகப்போகிறது ‌- கொண்டாட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியும் மேலும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நாளுக்காகத்தான் காத்துக் கொண்டிருப்பதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.