Master Ticket Booking in TamilNadu

மாஸ்டர் டிக்கெட்டை புக் செய்வதற்காக திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி உள்ளது.

Master Ticket Booking in TamilNadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை இப்படம் வெளியாக உள்ளதால் திரையரங்குகளில் டிக்கெட் புக் செய்ய ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

ஒருவரையருவர் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் புக் செய்துள்ளனர். கொரானா மீண்டும் புதிய உருவம் எடுத்துள்ள நிலையில் சமூக இடைவெளி மாஸ்க் என அனைத்தையும் மறந்து கூட்டம் கூடியது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் டிக்கெட் புக்கிங் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.