Master Third Look
குடியரசு தினத்திற்கு மாஸ்டர் படக்குழு ட்ரீட் கொடுக்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க ஷாந்தனு, ஸ்ரீமன், சேத்தன், விஜயின் நண்பர் சஞ்சய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். நடிகைகளில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜே ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

புத்தாண்டு விருந்தாக பர்ஸ்ட் லுக், பொங்கல் விருந்தாக செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி இருந்த நிலையில் நாளை குடியரசு தின விருந்தாக இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது விஜய் சேதுபதியின் லுக்காக தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.