Master Teaser Record in Youtube

தளபதி விஜய்யின் மாஸ்டர் பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.

Master Teaser Record in Youtube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஸ்ரீநாத், வர்ஷா பொல்லம்மா, தீனா உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக யூடியூப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ட்ரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் யூட்யூபில் 4.2 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுகுறித்த தகவலை சன் நியூஸ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.