Master Surprise for Dhanush Fans

மாஸ்டர் படத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Master Surprise for Dhanush Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வாழ்க்கை இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், தீனா, வர்ஷா பொல்லம்மா என பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். திரையரங்குகள் இல்லையென்றால் சினிமா இல்லை என தனுஷ் குறிப்பிட்டிருந்தார். விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மீண்டும் சினிமா கலாச்சாரத்தை கொண்டுவரும் என நம்புவதாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது மாஸ்டர் திரைப்படத்துறை தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் மோஷன் போஸ்டர் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனுஷ் ரசிகர்களும் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.