Master Success Party Photos

மாஸ்டர் படத்தின் வெற்றியை துபாயில் கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

Master Success Party Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா போன்ற திரை உலக பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் பொங்கலன்று வெளியான நிலையில், இந்தப் படம் வசூலிலும் சாதனையை படைத்து வருகிறது.

இப்படியான நிலையில் படக்குழுவினர் படத்தின் வெற்றியை துபாயில் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.