Master Story Leaked

மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என சமூக வலைத் வெளியாகியுள்ள தகவலால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Master Story Leaked : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் லீக்காகி உள்ளது. அதாவது கல்லூரியில் பணிபுரியும் விஜய் செய்த சிறு தவறால் அவர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு பணிமாற்றப்படுகிறார்.

இதன் முழுப் பொறுப்பில் இருக்கும் விஜய்சேதுபதி மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்ல முயல்கிறார். அதாவது மாணவர்களை வைத்து போதை பொருள் விற்பனை செய்கிறார்.

இதனை கண்டுபிடித்த தளபதி விஜய் வில்லன் விஜய் சேதுபதியை எப்படி அடக்குகிறார்? இந்த போதைப்பொருள் விவகாரத்தில் இருந்து மாணவர்களை எப்படி மீட்டு எடுக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என தெரிய வந்துள்ளது.