Master Released in Amazon Prime Video

அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Master Released in Amazon Prime Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க பல நடிகர், நடிகைகள் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இருப்பினும் இப்படம் வெளியான 16 ஆவது நாளான இன்று இத்திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

இதனால் வீட்டில் இருந்தே விஜய் படத்தை பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருப்பினும் அமேசான் ப்ரைம் வீடியோவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி விட்டதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்து விடும் என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமேசன் பிரைம் விடியோவில் வெளியான பின்னரும் மாஸ்டர் திரைப்படத்தின திரையரங்க வசூல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.