Master Release Trolls Photo

அப்போ அப்படி சொல்லிட்டு இப்ப இப்படி சொன்னா எப்படி என மாஸ்டர் மாளவிகா மோகனன் ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Master Release Trolls Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த மாதம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதனையடுத்து தற்போது ஒரு வழியாக ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என கூறிய மாஸ்டர் படகுகள் தற்போது படத்தை அனைவரும் திரையரங்கு வந்து பாருங்கள் என கூறி வருகிறது.

தளபதி விஜய் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தந்தைக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி தருமாறு கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசின் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது.

இப்பவும் கொரானா பரவிட்டு தான் இருக்கு, இப்ப மக்கள் பாதுகாப்பாக இருக்க வேணாமா? திரையரங்குக்கு வந்து படம் பார்க்கணுமா என பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

மாளவிகா மோகனன் நான் வீட்டில் இருக்கிறேன் நீங்களும் வீட்டில் இருங்கள் என்ற வாசகத்தை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மாஸ்டர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு நெட்டிசன்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.