Master Release in Kannada

கன்னட மொழியிலும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக போஸ்டர் ஒன்றை படக்கழு வெளியிட்டுள்ளது.

Master Release in Kannada : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், தீனா, பிரேம், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக இந்தியில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய மொழிகளில் தொடர்ந்து கன்னடாவிலும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றுடன் அறிவித்துள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.