Master Release in 1000 Theatres

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸில் இந்திய அளவில் புதிய சாதனையை படைக்க தயாராகி வருகிறது.

Master Release in 1000 Theatres : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜயின் உறவினர் பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய் வருகிறது. படக்குழு இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

நிச்சயம் படம் திரையரங்குகளில் வெளியாகும் திரையரங்குகளில் வெளியான பின்னரே OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து தற்போது இன்னொரு மாசான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலே மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.