Master Record in Ram Cinemas

முன்னணி நடிகர்களின் சாதனையை முறியடித்துள்ளது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம்.

Master Record in Ram Cinemas : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தளபதி 65 என்ற படத்தில் இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனையை படைத்து வருகிறது.

இந்நிலையில் ராம் சினிமாஸ் திரையரங்குகளில் இதுவரை வந்த திரைப்படங்களின் சாதனையை மாஸ்டர் கடந்து முதலிடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் உற்சாகத்திலும், கொண்டாட்டத்திலும் உள்ளனர்.